yarlathirady.com

பூமியை தாக்க காத்திருக்கும் சூரியப் புயல்-முன் ஆயத்த பனியில் நாசா.

[2024-03-12 09:38:22] Views:[19]

பூமியை எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு மிகப்பெரிய சூரியப் புயல் ஒன்று தாக்கவுள்ளது.இந்த சூரியப் புயலின் தாக்குதல்களை எதிர்நோக்க தற்போது நாசா தயாராகி வருகின்றது.சூரியப் புயல் விரைவில் உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வானில் எரிந்து கொண்டிருக்கும் சூரியனில் அவ்வப்போது, வெடிப்பு ஏற்பட்டு சூரியப் புயலாக (Solar Storm) மாறுவது வழமையான விடயமே.சூரியனின் இந்த செயல்பாட்டை கண்கானிப்பது மிக முக்கியமான விடயமாகும் ஏனென்றால், இவை புவியீர்ப்பு மண்டலத்தில் பெரும் இடையூறுகளை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றது.

புவியின் சுற்றுப் பாதையில் உள்ள செயற்கை கோள்கள், ஜிபிஎஸ் சிக்னல்கள் மற்றும் தொலை தூர ரேடியோகளிலும் பாதிப்பை ஏற்படுத்தகூடிய வள்ளமை கொண்டது.இந்த நிலையில், தற்போது விண்வெளி ஆராய்ச்சி மையங்களின் சோலார் ப்ரோப் இதனைப் பற்றி ஆய்வு செய்தவன்னம் உள்ளது.

இந்த ஆய்வில் "இணைய பேரழிவு" பற்றி அவர்கள் விவரித்துள்ளதுடன், சூரிய புயலின் போது, சூரியனில் இருந்து வரும் காந்தப்புலங்கள் பூமியின் வளிமண்டலத்தில் பாரிய மின்னோட்டத்தை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளனர்.இது சம்பந்தமாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில், “கரோனல் மாஸ் எஜெக்ஷன்ஸ் எனப்படும் இந்த வெடிப்புகள் மணிக்கு 11,000,000 கிலோமீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வரும்.இவை வாரத்திற்கு 20 முறை பூமியை நோக்கி வருகிறது. இவை 2025 ஆம் ஆண்டில் பூமியைத் தாக்கும் என்று நாசா தகவல் தெரிவித்துள்ளது.

இந்த சூரிய புயல் இப்போது தாக்கப்பட்டால், செயற்கைக்கோள்களில் எலக்ட்ரானிக்ஸ் கடுமையாக சேதமடையலாம். அதன் விளைவுகள் மோசமாக இருக்கும்.அத்துடன், இந்த சூரிய புயலால் நீண்ட தூர இணைப்புக்கு முக்கியமான நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பு கேபிள்கள் கூட பாதிக்கப்படலாம்.

வட மற்றும் தென் துருவங்களுக்கு அருகிலுள்ள பகுதிகள், இணைய உள்கட்டமைப்பின் பெரும்பகுதி ஆகியவைகள் இந்த நிகழ்வுகளால் மிகவும் பாதிக்கப்படக்கூடியவை.இன்றைக்கு உலகத்தில் எல்லாமே செயற்கைக்கோள் பயன்பாடு வழியாக தான் செயல்படுகிறது. இந்த சூழலில் செயற்கைக்கோள் பாதிப்பு அடைந்தால் அது சார்ந்த பிரச்சினைகளையும் நாம் எதிர்கொள்ளும் சூழ்நிலை ஏறபடும். இணையமே இல்லாத நிலை கூட உருவகலாம்” என எச்சரித்துள்ளனர்.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.