yarlathirady.com

முட்டாள்கள் தினமாக ஏப்ரல் முதலாம் திகதி கொண்டாடுவதன் பின்னனி.

[2024-04-01 10:56:34] Views:[13]

ஆண்டுதோறும் ஏப்ரல் முதலாம் திகதியை உலகம் முழுவதும் முட்டாள்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மக்கள் ஒருவருக்கொருவர் பிராங்குகள் செய்து ஏமாற்றிக்கொள்வதும், ஜோக்களை பரிமாறுவதும் நெருக்கமானவர்கள் அல்லது நண்பர்களை குறுப்புத்தனமாக சீண்டும் கேளிக்கையில் ஈடுபடுவது வழக்கமான விடயமே.

ஆனால் முட்டாள்கள் தினத்துக்கான காரணம் எங்கிருந்து தொடங்கியது என இது வரை சரியாக தெரியவில்லை என்றாலும், இந்த நாளில் ஒருவருக்கொருவர் ஏமாற்றி கொள்வது என்பது உலக வழக்கமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

குறும்புகளை செய்து மற்றவர்களை முட்டாள் ஆக்குவதால் இந்த நாள் முட்டாள்கள் நாள் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாள் உருவானது பற்றி சரியான ஆதாரங்கள் இல்லாவிட்டாலும், 1582இல் போப் ஆண்டவராக இருந்த 13ஆம் கிரிகோரி, வழக்கமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த நாள்காட்டியை மாற்றியமைத்தார். கிரிகோரியன் காலண்டர் என்று அழைக்கப்பட்ட இந்த காலண்டரில் புத்தாண்டு ஜனவரி 1ஆம் திகதி என்று இருந்தது.

புதிய புத்தாண்டு நாளை ஏற்றக்கொண்டவர்கள் ஜனவரி 1ஆம் திகதி புத்தாண்டை கொண்டாட, ஏற்க மறுத்தவர்கள் அதற்கு முன்பு இருந்த ஏப்ரல் 1ஆம் திகதியை புத்தாண்டாக கொண்டாடுவதை தொடர்ந்தனர்.ஆனால் புதிய தேதியை பின்பற்றுவோர் அதிகமாகி, பழைய திகதியை பின்னபற்றுவோர் ஏமாளி, முட்டாள் என கேலி செய்ய தொடங்கினர். அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக பரிசுகளை வழங்கினர். இதுதான் முட்டாள்கள் தினம் என்று கொண்டாடுவதற்கான பல காரணங்களில் ஒன்று என நம்பப்படுகிறது.

மற்றொரு நிகழ்வாக ரோமானிய திருவிழாவான ஹிலாரியா, (லத்தீன் மொழியில் மகிழ்ச்சிகரமான) கொண்டாட்டத்தை முட்டாள்கள் தினம் என்று அழைக்கிறார்கள். இந்த நாளில் ரோமானிய மக்கள் மாறுவேடங்கள் அணிந்து ஒருவருக்கொருவர் கேலி செய்தும், ஏமாற்றியும் விளையாடி கொள்கிறார்கள்.

அதேபோல் பிரான்ஸ் நாட்டில் ஏப்ரல் முதலாம் திகதியை ஏப்ரல் மீன் என்று அழைக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் அங்குள்ள ஆறுகளில் மீன்கள் அதிகம் இருக்கும் நிலையில், பேப்பர் போன்று மீன் செய்து அதை மற்றவர்களின் முதுகில் ஒட்டி ஏமாற்றி சிறுவர்கள் கிண்டலடித்து ஜாலி செய்வார்கள்.

வட துருவத்தின் வசத்த காலத்தின் தொடக்கமாக இந்த நாள் கருதப்படுகிறது. இந்த நாளிலிருந்து அங்கும் பகலும் இரவும் சமமாக இருக்கும் என கூறப்படுகிறது. 18ஆம் நூற்றாண்டில் பிரபலமான இந்த நாளுக்கு பல்வேறு விதமான வரலாற்று சான்றுகள் இருந்தாலும், ஏமாற்றுவதென்பது பொதுவான விஷயமாகவே இருந்து வருகின்றது.

அதேசமயம் குறும்புத்தனத்தையும், வேடிக்கையும் வெளிப்படுத்தும் நாளாக முட்டாள்கள் நாள் இருப்பதால் வரம்பு மீறாமல் தீங்கு விளைவிக்காமல் மற்றவர்களிடம் குறும்பாக நகைத்தல்வேண்டும். இந்த நாளில் யாரையும் புண்படுத்தாதவாறும், பாதிக்காதவாறும் நகைச்சுவை சொல்வது, புரளி கிளப்புவது, குறும்பாக விளையாடுவது போன்றவற்றை மேற்கொள்ளலாம்.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.