yarlathirady.com

மற்றுமொரு ஏவுகணை சோதனையில் வெற்றி கண்ட இந்தியா..!

[2024-05-03 21:43:12] Views:[15]

இந்தியா மற்றுமொரு அதிநவீன வழிமுறைகளுடன் கூடிய ஏவுகணை பரிசோதனை ஒன்றினை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இந்திய படையினருக்கு தேவையான ஏவுகணைகளை தயாரித்து வருகின்றது.

அவை பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு இந்திய இராணுவ படைக்கட்டமைப்பில் சேர்க்கப்படுகின்றது.

இந்நிலையில் டார்பிடோ என்கிற ஏவுகணையை இந்திய இராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் நேற்று வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒடிசா கடற்கரையில் உள்ள டொக்டர் APJ அப்துல் கலாம் தீவில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. சூப்பர்சோனிக் ஏவுகணையின் உதவியுடன் ஸ்மார்ட் ஏவுகணை அமைப்பு பரிசோதிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனையில் ஏவுகணை அமைப்பின் வேகக் கட்டுப்பாடு மற்றும் பல அதிநவீன வழிமுறைகள் சரிபார்க்கப்பட்டதாக இந்திய இராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.