yarlathirady.com

170 கோடியாக உயரவுள்ள இந்திய மக்கள் தொகை...!!

[2024-07-13 09:56:08] Views:[40]

இந்தியாவின் மக்கள் தொகை 2060ம் ஆண்டில் 170 கோடியாக உயரும் என ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.

உலக மக்கள் தொகை உயர்வு தொடர்பான ஐ.நாவெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “உலக மக்கள் தொகை அடுத்த 50 - 60 ஆண்டுகளுக்கு தொடர்ந்து உயர்ந்து, 2080ம் ஆண்டு மத்தியில் உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, 820 கோடியாக உள்ள உலக மக்கள் தொகை, 2080ல் 1,030 கோடியாக உயரும்.

உச்சத்தை தொட்டதும் படிப்படியாகக் குறைந்து இந்த நுாற்றாண்டின் இறுதியில் 1,020 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகையில் சீனாவை முந்தி முதலிடத்தைப் பிடித்துள்ள இந்தியா 2,100 வரை அந்த இடத்தை தக்கவைத்துக் கொள்ளும். இப்போது, 145 கோடி யாக உள்ள இந்திய மக்கள் தொகை, 2054ல் 170 கோடியாக உயர்ந்து உச்சம் தொடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


சினிமாசெய்திகள்
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
வெளியானது சர்தார்-2 திரைப்படத்தின் அப்டேட்
2026-05-26 11:33:17
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் கார்த்தி, தனது இயல்பான நடிப்பு மற்றும் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களால் ரசிகர்களின் மனதில் தனித்த இடத்தைப் பிடித்துள்ளார்.