yarlathirady.com

திரைப்பட கதாநாயகர்களாகும் எமது மலையக அரசியல்வாதிகள்

[2024-07-29 12:29:29] Views:[21]

அண்மைக்காலமாக எமது மலையக பிரதிநிதிகள் இந்தியாவில் போன்று குறிப்பாக தமிழ்நாட்டின் வழியில் அரசியல் நிகழ்வுகளை முன்னெடுப்பதாக தெரிகிறது .ஆம் நாம் பார்த்த வகையில் இவர்கள் தங்களை தமிழ் திரைப்பட கதாநாயகர்கள் போல காட்டிக் கொள்ள முனைவதாக தெரிகின்றது. அத்தோடு அதிரடி அரசியல் நடவடிக்கைகள் சில திரைப்பட பாணியில் அமைந்திருப்பது அவர்களை பின்பற்றும் இளைஞர்களையும் தவறான வழியில் கொண்டு செல்லும் என்று கூறினால் மறுப்பதற்கு இல்லை.


ஏற்கனவே எமது மலையக சமுதாயம் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கி அனைத்து விடயங்களிலும் இந்திய கலாசாரத்திற்கு அடிமையாகி உள்ள நிலையில் தற்போது அரசியல்வாதிகளும் பூரணமாக இந்தியாவினை பின்பற்றி வருவது ஆரோக்கியமான விடயம் அல்ல. ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒவ்வொரு அடையாளம் உள்ளது அத்தகைய அடையாளத்தை நாம் தொலைப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.


அரசியல் ரீதியான பிரச்சினைகளை நன்கு ஆராய்ந்து பொறுமையாக தீர்வு காண்பதுதான் தலைமைகளின் கடமையாகும்.அதைவிடுத்து திரைப்பட பாணியில் அதிரடி காட்டி பின்னர் நீதிமன்றம் வரை போய் நிற்பதெல்லாம் நல்லதொரு தலைமைக்கு அழகல்ல.


இத்தகைய அரசியல்வாதிகளை பின்பற்றும் இளைஞர்களும் ஒரு பிரச்சினையென்றால் அவ்வரசியல்வாதிகளைப் போன்றே அடிதடிக்குள் இறங்குவார்கள். இது தவறான உதாரணமாக அமைந்துவிடாதா ? ஏற்கனவே தென்னிந்திய திரைப்பட பாணியில் மது, போதை என தவறான வழியில் சமூகம் பயணித்து கொண்டிருக்கும் வேளையில் இத்தகைய விடயங்கள் வடகிழக்கில் காணப்படும் வாள்வெட்டு குழுக்கள் போன்ற ஆபத்தான விஷகிருமிகளை எமது சமூகத்திலும் விதைக்குமல்லவா?


அரசியல் மட்டுமல்ல ஆன்மிகத்திலும் தற்போது இந்திய ஆதிக்கம் தொடர்கிறது. புதிது புதிதாக யார் யாரோ வருகின்றனர்.மக்களின் அனுமதியோ விருப்பமோ அவர்களுக்கு தேவையில்லை.அரசியல்வாதிகளின் பின்னணியில் அவரவர் விருப்பத்திற்கு மலையகத்தை கையாளுகின்றனர். கேட்பார் எவருமில்லை என்று கருதி விட்டார்கள் போலும். இல்லையென்றால் தென்னிலங்கை ஊடகங்கள் சொல்வதுபோல் மலையகம் இந்திய அரசின் அடிமையாகிவிட்டதா? இதனை மக்களாகிய நாம் சிந்திக்க வேண்டிய விடயம்.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.