yarlathirady.com

விண்வெளிக்குச் சென்று மீற்பு பணிகளை மேற்கொள்ளவுள்ள எலான் மஸ்க்..!!

[2024-08-09 11:24:53] Views:[15]

சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றுள்ள இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையும் அவரது சக வீரரும் இந்த ஆண்டு முடியும் வரை பூமிக்குத் திரும்பமுடியாது என தகவல் வெளியாகியுள்ளது.

சுனிதா வில்லியம்ஸும் அவரது சக விண்வெளி வீரருமான வில்மோரும் மே 05 அன்று ஒரு சோதனைப் பயணத்திற்காக விண்வெளிக்கு சென்றுள்ளனர்.

விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காலமாக அவர்களால் பூமிக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.

குறிப்பாக இந்த ஆண்டு ஜூன் மாதம் 03ஆம் திகதியே பூமிக்குத் திரும்பியிருக்கவேண்டிய நிலையில் தற்போது 2 மாதங்களாகியும் அவர்களால் பூமிக்கு திரும்ப முடியவில்லை.

இப்போதைக்கு பூமிக்கு திரும்புவது சாத்தியமில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த ஆண்டு, அதாவது, 2025ஆம் ஆண்டு, பெப்ரவரி மாதம் வரை, பூமிக்குத் திரும்ப வாய்ப்பில்லை என நாசா அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எதிர்வரும் 18ஆம் திகதி “Crew 9” என்ற திட்டத்தின் கீழ், எலான் மஸ்க்கின் Space-X நிறுவனத்துடன் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 4 பேர் கொண்ட குழுவை அனுப்புவதற்கு நாசா தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.