yarlathirady.com

பிரேஸில் விமான விபத்து: 62 பேர் பரிதமாக பலி!

[2024-08-11 11:16:07] Views:[12]

பிரேஸில் நாட்டில் 62 பயணிகளுடன் சென்ற விமானம் ஒன்று நேற்று விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இதில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்க வாய்ப்பிருப்பதாக அந்த நாட்டு அதிபா் லூலா டாசில்வா தெரிவித்துள்ளார்.

சா பாலோ சா்வதேச விமான நிலையமான குவாருல்ஹோஸுக்கு 58 பயணிகள் மற்றும் 4 விமானப் பணியாளா்களுடன் சென்ற தங்களின் விமானம் விபத்துக்குள்ளானதாக வோபாஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியது.

வின் ஹீடோ நகா்ப் பகுதியில் விபத்துக்குள்ளான விமானம் கீழே விழுந்ததாக அந்த நகரின் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறை குழுக்கள் விரைந்துள்ளன.

தெற்கு பிரேஸிலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அந்த நாட்டு அதிபா் லூலா டாசில்வா, விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்க வாய்ப்பிருப்பதாகக் கூறி அங்கு கூடியிருந்த பொதுமக்களை ஒரு நிமிடம் அமைதியாக எழுந்து நிற்குமாறு கேட்டுக்கொண்டாா்.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.