yarlathirady.com

இந்த வருடத்தில் தற்காலிகமாக மற்றொரு நிலவு பூமிக்கு கிடைக்கப்போகிறதாக விஞ்ஞானிகள் தகவல்!

[2024-09-28 20:21:02] Views:[16]

இந்த வருடத்தில் தற்காலிகமாக மற்றொரு நிலவு பூமிக்கு கிடைக்கப்போகிறது என்று விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டிருந்தாக செய்திகள் வெளியாகியுள்ளது.


Asteroid 2024 PT5 என்று பெயரிடப்பட்ட சிறு கோளானது நாளை முதல் (29) நவம்பர் 25 வரை பூமிக்குச் சிறு நிலவாக செயற்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 பிடி5-ஐ என அழைக்கப்படும் ஒரு சிறிய விண்கல் பூமியின் அருகே, சுமார் 14 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் வர இருக்கிறது. இது சுமார் 5 முதல் 20 மீட்டர் விட்டம் கொண்ட பாறையாகும். இதன் மீது சூரிய ஒளிப்பட்டு அது பூமியை நோக்கி திரும்பும். அப்போது நமக்கு வானில் இன்னொரு நிலாவும் தோன்றுவது போல் காட்சி அளிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியின் புவிஈர்ப்பு விசையினால் ஈர்க்கப்பட்டு சிறு நிலவாக செயல்பட்டு பூமியை சுற்றும்


இந்த சிறு நிலவானது ஒரு முறை பூமியை சுற்றும் முன்னரே புவி ஈர்ப்பு விசையில் இருந்து விடுபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பூமிக்கு அருகில் இருக்கும் பொருட்களுக்குள் ஏற்படும் உறவை ஆய்வு செய்யவும், புவியீர்ப்பு அழுத்தங்கள் மற்றும் விசையினால் பூமிக்கு வெளியில் உள்ளவை எப்படி செயல்படுகிறது. என்பதை அறிந்து கொள்ளவும் இது உதவியாக இருக்கும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


கடந்த 2022 -ம் ஆண்டில் NX1 என்ற சிறு நிலவு பூமியை சுற்றியது குறிப்பிடத்தக்கது.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.