yarlathirady.com

சவுதி பாலைவனத்தை மூடிய பனிப்பொழிவு!

[2024-11-11 11:11:07] Views:[21]

சவுதி அரேபிய பாலைவனத்தில் முதல் முறையாக பனிப்பொழிவு ஏற்பட்டிருப்பது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பலத்த சூறாவளிக் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.


இந்நிலையில் சவுதி அரேபியாவின் அல்-ஜாவ்ப் பகுதியில் முதல் முறையாக பனிப்பொழிவு நிகழ்ந்துள்ளது. வறண்ட பாலைவன நிலப்பரப்பை மூச்சடைக்க வைக்கும் வகையில் இந்த குளிர்க்கால அதிசயம் அரங்கேறியுள்ளதாகவும் கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை ஆகியவற்றை தொடர்ந்து இந்த பனிப்பொழிவு நிகழ்ந்துள்ளதாக ஊடகங்கள் வாயிலாக தெரிய வருகிறது.. பாலைவனப் பகுதியில் பனிப்பொழிவு வெண் பட்டுப்போல் போர்த்தியிருப்பதை நெட்டிசன்கள் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களாகவும் வீடியோக்களாகவும் ஷேர் செய்து வருகின்றனர்.


பாலைவனப் பகுதியில் பனிப்பொழிவு ஏற்பட்டிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அரேபிய கடலில் இருந்து உருவாகி ஓமன் வரை நீண்டு இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமே சமீபத்தில் பெய்த ஆலங்கட்டி மழைக்கு காரணம் என ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.