yarlathirady.com

இந்தியாவில் ஜல்லிக் கட்டுப் காளை முட்டியதில் பலர் படுகாயம்..!

[2025-02-17 22:39:51] Views:[21]

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே தவசிமடை பகுதியில் புனித அந்தோணியார் சர்ச் திருவிழாவை முன்னிட்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 59 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த போட்டியில் 725 காளைகளும், 350 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டிருந்ததாகவும், போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற வீரர்களுக்கும் காளைகளின் உரிமையாளர்களுக்கு பெறுமதியான பரிசு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இப்போட்டியில் கலந்து கொண்ட வீரர்களில் 59 நபர்களை காளைகள் முட்டியதில் காயமடைந்துள்ளனர் எனவும், அவர்கள் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த போட்டிக்காக 300க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


சினிமாசெய்திகள்
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
வெளியானது சர்தார்-2 திரைப்படத்தின் அப்டேட்
2026-05-26 11:33:17
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் கார்த்தி, தனது இயல்பான நடிப்பு மற்றும் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களால் ரசிகர்களின் மனதில் தனித்த இடத்தைப் பிடித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய்யின் கடைசி படத்தின் வெளீயீடு தொடர்பான செய்தி..!!
2026-05-25 21:42:18
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படமாக கருதப்படும் இப்படம், பல காரணங்களால் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.