yarlathirady.com

புதிய பாப்பரசர் தெரிவுகான நடவடிக்கைகள் மே 07இல் ஆரம்பம்..!

[2025-05-03 11:44:24] Views:[15]

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் திருத்தந்தையின் மறைவையடுத்து வெற்றிடமாகவுள்ள பதவிக்கு புதிய பாப்பரசரை தெரிவு செய்யும் உத்தியோகபூர்வ செயற்பாடுகள் மே மாதம் 07ஆம் திகதி நடைபெறவுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.

இம்முறை அதற்கான வாக்கெடுப்புக்காக 135 கர்தினால்கள் தகைமை பெற்றுள்ளதாகவும் வத்திக்கான் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் ஐரோப்பாவைச் சேர்ந்த 53 கர்தினால்களும் ஆசியாவைச் சேர்ந்த 23 கர்தினால்களும் வட அமெரிக்காவைச் சேர்ந்த 20 கர்தினால்களும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 18 கருதினால்களும் தென் அமெரிக்காவைச் சேர்ந்த 17 கர்தினால்கள் மற்றும் ஓசானியாவைச் சேர்ந்த 4 பேரும் தகைமை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

71 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி பரிசுத்த பாப்பரசருக்கான தேர்தலில் கலந்து கொள்ளும் கர்தினால்கள் 80 வயதுக்கு குறைந்தவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. வத்திக்கான் சிஸ்டைன் பேராலயத்தில் நடத்தப்படும் இந்த வாக்கெடுப்பு மிக இரகசியமாக முன்னெடுக்கப்படவுள்ளது.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.