yarlathirady.com

பொலிஸாரை தாக்கி கைதான பூனை பிணையில் விடுதலை! தாய்லாந்தில் நிகழ்ந்த வினோத சம்பவம்:

[2025-05-27 10:59:13] Views:[13]

தாய்லாந்தில் பொலிஸாரை தாக்கிய பூனை கைது செய்யப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்து நாட்டின் பேங்காக் பகுதியில் ஒருவர் ஷார்ஹேர் வகை பூனை ஒன்றை நுப் டாங் என பெயரிட்டு ஆசையாக வளர்த்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் இந்த பூனை காணாமல் போனது. அதை தேடியலைந்த உரிமையாளர் இதுகுறித்து காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்.

காணாமல் போன பூனை நுப் டாங் பல இடங்களில் பயணித்து பூங்கா ஒன்றில் இருந்துள்ளது. பார்க்கவே அழகாக இருக்கும் அந்த பூனை ஆதரவின்றி இருந்ததை கண்ட அப்பகுதி பொலிஸார் அதை தூக்க சென்றபோது அது அவர்களை நகத்தால் பிறாண்டி தாக்கியுள்ளது.

இதனால் நுப் டாங் மீது வழக்குப்பதிவு செய்த பொலிஸார் அதை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதியாக பூனை இருக்கும் போட்டோவை சமூக வலைதளங்களில் அவர்கள் வெளியிட்டு பூனை உரிமையாளர் தங்களை தொடர்பு கொள்ள வேண்டுமென தெரிவித்திருந்தனர்.

க்யூட்டான நுப் டாங்கை பார்த்த சிலர் அதன் உரிமையாளர் வராவிட்டாலும் தாங்களே அதை தத்தெடுத்துக் கொள்வதாக பொலிஸாரிடம் கெஞ்சினர். ஆனால் பொலிஸ் அதற்கு மறுத்து விட்டனர்.

இந்நிலையில் நுப் டாங் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள விஷயம் அதன் உரிமையாளருக்கு தெரிய வந்து அவர் அங்கு சென்றபோது, அவரிடமும், பூனையிடமும் கையெழுத்து வாங்கிக் கொண்டு நுப் டாங்கை பிணையில் பொலிஸார் அனுப்பியுள்ளனர்.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.