ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு..!
[2025-07-20 19:25:22] Views:[26]
ரஷ்யாவின் கிழக்கு கம்சட்கா பிராந்தியத்தின் கடற்கரையில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலநடுக்கமானது 7.4 ரிச்டர் அளவில்பதிவாகியுள்ளதாக யூரோ-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
20 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ஆரம்பத்தில் 6.7 ரிச்டர் அளவில் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.










