இஸ்ரேல்–காசா போர் தற்காலிக இடை நிறுத்தம்...!
[2025-07-27 18:43:17] Views:[12]
மனிதாபிமான உதவிகளை விநியோகிக்க அனுமதிக்கும் வகையில், இன்று முதல் காசா பகுதியில் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் போர் நடவடிக்கைகளை இடை நிறுத்துவதாக இஸ்ரேலியப் படைகள் அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி, இன்று முதல் அல்-மவாசி, டெய்ர் அல்-பலா மற்றும் காசா நகரம் ஆகிய மூன்று பகுதிகளில் ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை போர் நடவடிக்கைகளை தட்காலிகமாக இடை நிறுத்துவதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் செய்தி வெளியிட்டுள்ளது.










