yarlathirady.com

இலங்கையில் கைதான 155 வெளிநாட்டவர்கள்: அனைவரையும் உடனடியாக நாடு கடத்த நடவடிக்கை..!

[2025-07-30 19:23:56] Views:[20]

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இன்று கொழும்பிலுள்ள ஒரு அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்திய பொது விசா காலாவதியான 155 இந்திய பிரஜைகளை கைது செய்துள்ளது.

இது இலங்கையின் வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய சட்டவிரோத குடிநுழைவுச் சம்பவமாக கருதப்படுகிறது.

கொழும்பிலுள்ள ஒரு கட்டிடத்தில் சர்வதேச இணையவழி விளம்பர மற்றும் சூதாட்டச் செயற்பாடுகளுடன் தொடர்புடைய நிறுவனமொன்றை சுற்றிவளைத்த போது குறித்த சந்தேநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் அனைவரும் 25–45 வயதுக்குள் உள்ள ஆண்கள். இவர்கள் ஒரு மாதம் முதல் ஒரு வருடம் வரை வீசா காலத்தை மீறி வேலை செய்துள்ளனர்.

இந்த நிலையில், வெலிசர தடுப்பு மையத்தில் ஏற்கனவே 100க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேறிகள் உள்ளதால், இந்த 155 பேரையும் அங்கு தற்காலிகமாக வைத்திருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அவர்கள் அனைவருக்கும் உடனடி நாடு கடத்தல் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இவர்கள் வழங்கிய விசா கட்டணங்கள் மற்றும் அபராதங்களாக ரூ.33.6 மில்லியன் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு ஒரே நாளில் அதிகபட்ச வருமானம் கிடைத்துள்ளதாகவும், இது வரலாறு காணாத அளவிலான சட்ட நடவடிக்கை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.