yarlathirady.com

08 வயது சிறுவன் நீர் நிரம்பிய குழியில் விழுந்து பலி.!!

[2025-08-04 12:41:21] Views:[20]

பொகவந்தலாவை கிவ் கீழ்பிரிவு தோட்டத்தில் மலசலகூடம் அமைப்பதற்காக வெட்டப்பட்ட குழியில் விழுந்து 08 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (03) மாலை 05.30 மணியளவில் இடம்பெற்ற இத்துயர் சம்பவத்தில் தரம் மூன்றில் கல்வி பயிலும் லியோ பெற்ரீக் எலன் சசன் என்ற சிறுவன் உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவனின் தந்தை வீடு நிர்மாணப் பணியில் ஈடுபட்டுகொண்டிருந்தவேளை, சிறுவன் தனது கைகளை கழுவுவதற்காக வீட்டின் பின்புறத்தில் நீர் நிரம்பி காணப்பட்ட குழிக்கு அருகில் சென்ற போது தவறி விழுந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

நீண்டநேரமாகியும் தனது மகனை காணவில்லை என்பதால், தந்தை விட்டின் பின்புறமாக சென்று பார்த்தபோது சிறுவனின் பாதணிகள் இரண்டும் குழியில் மிதந்துகொண்டிருந்துள்ளன.

அதன் பிறகு சிறுவனை மீட்டெடுத்து டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதே சிறுவன் உயிரழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டனர்.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.