நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து ; 40 பேர் மாயம்
[2025-08-19 12:10:52] Views:[16]
நைஜீரியா - சோகோட்டோ மாநிலத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நாற்பது பேர் காணாமல் போயுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன பிரபலமான சந்தைக்குப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகொன்றே விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது விபத்து இடம்பெற்ற போது குறித்த படகில் 50 பேர் பயணித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
10 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.










