சீனாவில் வெள்ளப்பெருக்கு - 33 பேர் மாயமாகியுள்ளதுடன் மாயமானவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
[2025-08-22 11:26:34] Views:[16]
சீனாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் மாயமாகியுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக சீனாவின் வடக்கு பிராந்தியத்தில் பெய்து வந்த கனமழையால் மஞ்சள் நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 33 பேர் மாயமாகியுள்ளதுடன் மாயமானவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.










