yarlathirady.com

159 ஆண்டுகளை நிறைவு செய்த இலங்கை பொலிஸ் திணைக்களம்.

[2025-09-03 14:52:40] Views:[36]

1866 செப்டெம்பர் 3 அன்று முதல் பொலிஸ் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் அதன் 159ஆவது ஆண்டை நிறைவு செய்கிறது. அதன் முதல் பொலிஸ் அதிகாரியாக ஜி.டபிள்யூ.ஆர். கேம்பல் நியமிக்கப்பட்டிருந்தார்.

159ஆவது பொலிஸ் திணைக்கள தினத்தை கொண்டாடும் வகையில் இன்று (03) பொலிஸ் களப் படை தலைமையகத்தில் சிறப்பு விழா நடைபெறவுள்ளது.

இதன் காரணமாக பொலிஸ் களப் படைத் தலைமையகத்துக்கு எதிரேயுள்ள வெளிச்செல்லும் பாதையில் அமைந்துள்ள பேருந்து தரிப்பிடம் இன்று பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 7.00 மணி வரை ஹேவ்லொக் வீதியிலுள்ள பொன்சேகா வீதி சந்திக்கு அருகிலுள்ள பேருந்து தரிப்பிடத்துக்கு தற்காலிகமாக மாற்றப்படும்.

பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குள் தும்முல்ல சந்தி மற்றும் திம்பிரிகஸாய சந்திக்கிடையில் பகல் 2.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையில் கன்டெய்னர், லொறி மற்றும் டிப்பர் போன்ற கனரக வானகப் போக்குவரத்து கட்டுப்படுத்தப்படும்.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.