yarlathirady.com

தங்க பிஸ்கட்டுக்களை காலுறைக்குள் வைத்து கடத்த முயன்ற நபர் :கட்டுநாயக்கவில் கைது.!

[2025-09-14 16:43:24] Views:[12]

கட்டுநாயக்க - பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பணியாளர் வெளியேறும் வாயிலில் வைத்து தங்க பிஸ்கட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை 6:50 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இலங்கை விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் 54 வயதுடைய ஊழியர் ஆவார்.

5.941 கிலோ எடையுள்ள 24 கரட் தங்க பிஸ்கட்டுகளுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஊழியர், 51 தங்க பிஸ்கட்டுகளை, இரு கால்களின் காலுறைகளுக்குள் மறைத்து வைத்து, ஊழியர்களுக்கான வெளியேறும் வாயில் வழியாக கடத்த முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை கைப்பற்றப்பட்ட தங்க பிஸ்கட்டுக்களின் மதிப்பு 210.5 மில்லியன் ரூபா என்பதும் குறிப்பிடத்தக்கது.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.