yarlathirady.com

டெங்கு அபாயம் மிகுந்த வலயத்தில் யாழ்ப்பாணம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!!

[2025-10-10 14:25:49] Views:[13]

வடக்கு மாகாணத்தில் டெங்கு நுளம்பு அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சமன் பத்திரன தெரிவித்துள்ளார்.

அதன்படி வடக்கு மாகாணத்தில் பல இடங்களில் டெங்கு நுளம்புக்கான குடம்பிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தற்போது நிலவும் மழையுடனான வானிலையால் நுளம்புக் குடம்பிகள் அதிகரிப்பதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளதாகவும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

அதனடிப்படையில் டெங்கு காய்ச்சல் பரவ ஆரம்பித்தால் அதன் தாக்கம் சடுதியாக அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக அவர் எச்சரித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களே அதிக அபாயமிகுந்த வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் வாரத்திற்கு ஒருமுறையேனும் தமது சுற்றுச் சூழலைத் துப்பரவாக்கி, சிறந்த சுகாதார முறையைப் பேணுமாறு, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சமன் பத்திரன கோரிக்கை விடுத்துள்ளார்.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.