yarlathirady.com

சூர்யா–RJ பாலாஜி கூட்டணியில் உருவாகும் "கருப்பு": படக்குழு வெளியிட்ட தகவல்..!

[2025-10-19 20:01:46] Views:[12]

நடிகர் சூர்யா முதன்முறையாக RJ பாலாஜி இயக்கத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படம் 'கருப்பு', சினிமா உலகில் தற்போது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தின் முதல் பாடல் 'GOD MODE', நாளை (அக்டோபர் 20) வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்தப் படத்தின் மூலம் RJ பாலாஜி, இயக்குநராக தனது புதிய முயற்சியை ஆரம்பிக்கிறார். இதற்கு முன் 'முக்குத்தி அம்மன்', போன்ற படங்களில் தனது நகைச்சுவையை கலந்து காட்டிய RJ பாலாஜி, இப்போது அரசியல் உள்நோக்கங்களோடு இயக்குநராக களமிறங்கியுள்ளார். சமீபத்திய நாட்களில் சூர்யா அதிகமாக கெஸ்ட் ரோல்களிலேயே கவனம் செலுத்தி வந்தார். ஆனால் 'கருப்பு' படத்தில் அவர் மீண்டும் ஹீரோவாக நடித்திருப்பது அவரது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.