yarlathirady.com

நேற்று ஆரம்பமானது கந்த சஸ்டி விரதம்: ஆயிரக்கணக்கான அடியார்கள் விரதம் அனுஸ்டிப்பு.

[2025-10-23 21:08:21] Views:[12]

முருகப்பெருமானின் தனிப்பெரும் விரதமாகவும் அதிகளவில் இந்துக்களினால் அனுஸ்டிக்கப்படும் விரதமாகவும் உள்ள கந்த சஸ்டி விரதம் நேற்றைய தினம் ஆரம்பமானது.

யாழ் மாவட்டத்தில் உள்ள முருகன் ஆலயங்களில் நேற்று கந்தசஸ்டி விரதம் வெகுவிமர்சையாக ஆரம்பமானதுடன் ஆயிரக்கணக்கான அடியார்கள் இன்றிலிருந்து விரதம் அனுஸ்டிக்கின்றனர்.

யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்தில் நேற்று காலை விசேட யாக பூஜை, அபிசேக பூஜை நடைபெற்றதை தொடர்ந்து விசேட பூஜைகள் நடைபெற்று கந்தசஸ்டியை முன்னிட்டு வைக்கப்பட்ட கும்பத்திற்கு அடியார்கள் பூ இட்டு வழிபடும் நிகழ்வு நடைபெற்றது.

கந்த சஷ்டி விரதம், முருகப் பெருமானின் சூரசம்ஹாரத்தை நினைவுகூரும் மிக முக்கியமான விரதமாகும்.

ஐப்பசி மாத சுக்லபட்ச பிரதமை தொடங்கி சஷ்டி வரையிலான ஆறு நாட்கள், பக்தர்கள் கடுமையான உண்ணாவிரதம் கடைப்பிடித்து, கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்து, தீபாராதனை செய்கின்றனர்.

நேற்றைய தினம் ஆயிரக்கணக்கான அடியார்கள் விரத ஆரம்ப பூஜையில் கலந்துகொண்டதுடன் ஆறாம் நாளான திங்கட்கிழமை சூரசம்ஹார நிகழ்வு நடைபெறவுள்ளதுடன் மறுநாள் விரதம் நிறைவுபெறும்.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.