yarlathirady.com

03 தங்க பதக்கங்களை வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்த வீராங்கனை..!!

[2025-10-31 12:42:29] Views:[11]

இந்தியாவின் ராஞ்சியில் நடைபெற்ற 4வது தெற்காசிய தடகள செம்பியன்ஷிப் போட்டியில், இலங்கையை பிரதிநித்துவப்படுத்தி போட்டிகள் பங்குபற்றிய சஃபியா யமிக் 03 தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

இவர் பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் 23.58 வினாடிகளில் முடித்து புதிய சாதனை படைத்தார்.

27 ஆண்டுகளுக்கு முன்பு, 1998 ஆம் ஆண்டு இந்தியாவின் PT உஷா படைத்த சாதனையை அவர் முறியடித்தார்.

அத்துடன் சஃபியா யமிக் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் தங்கப் பதக்கம் வென்று தெற்காசியாவின் வேகமான தடகள வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றதுடன், 4x100 மீட்டர் அஞ்சல் ஓட்டப்போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

அவர் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் 11.53 வினாடிகளில் ஓடி தங்கப் பதக்கம் வென்றார்.

அதன்படி, இந்த செம்பியன்ஷிப்பில் சஃபியா யமிக் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.