பிலிப்பைன்ஸை புரட்டிப் போடும் சூறாவளி: அதிகரிக்கும் பலி எண்ணிகை..!!
[2025-11-05 12:51:47] Views:[18]
பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய கல்மேகி என்ற சூறாவளி மற்றும் கனமழையுடன் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 66 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலட்சக்கணக்கானோர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்ககள் தகவல் தெரிவித்துள்ளன. வெள்ளத்தில் சிக்கி சுமார் 300 வீடுகள் சேதம் அடைந்தன. பல வாகனங்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சூறாவளி காரணமாக 180க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.










