yarlathirady.com

யாழில் விஸ்வரூபம் எடுக்கும் டெங்கு; விடுக்கப்பட்ட எச்சரிக்கை

[2025-11-23 18:58:44] Views:[26]

யாழ் மாவட்டத்தில் கடந்த மாதங்களாக டெங்கு தொற்று கடந்த இரு வாரங்களுக்குள் வேகமாக அதிகரித்து அபாய நிலையை எட்டியுள்ளது என்று யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிபாளர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்த்துளளார்.

கடந்த சில ஆண்டுகளில் யாழ் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட டெங்கு நோயின் புள்ளிவிபரங்கள் .

2024 இல் 5000 பேரும்,
2023 இல் 3986 பேரும்,
2022 இல் 3406 பேரும்,
2021 இல் 310 பேருமாக நோயாளர்கள் அடையளம் காணப்பட்டிருந்தனர்.

கடந்த இரு வாரங்களில், காலநிலை மாற்றம் காரணமாக தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து, மாவட்டத்தின் அபாய மட்டத்தை கடந்துள்ளது.இது தொடருமானால் பாரிய சவாலை யாழ் மாவட்டம் எதிர் நோக்க நேரிடும்.

அதனால் துறைசார் அதிகாரிகள் மக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதுடன் பாடசாலைகள், வீடுகள், ஆலயங்கள், அரச நிறுவனங்கள், என அனைத்து இடங்களிலும் அது தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

அதற்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் சுகாதார சேவைகள் பணியகம் வழங்கும் எனவும் சுகாதார சேவைகள் பணிபாளர் ஆர்.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.