yarlathirady.com

பீபா உலகக் கிண்ணம் 2026 - அணிகள் பங்குபற்றும் குழுக்கள் விபரம் இதோ.

[2025-12-07 20:37:36] Views:[25]

கடந்த 05 ஆம் திகதி வொஷிங்டன் டிசி கென்னடி நிலையத்தில் உத்தியோகபூர்வமாக நடைபெற்ற பீபா உலகக் கிண்ணம் 2026க்கான பகிரங்க குலுக்கலின்போது பங்குபற்றவுள்ள அணிகள் எந்தெந்த குழுக்களில் இடம்பெறும் என்பது தீர்மானிக்கப்பட்டது.

ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப், ஜனாதிபதி குளோடியா ஷெய்ன்போம், பிரதமர் மார்க் கார்னி ஆகிய மூவரும் பீபா உலகக் கிண்ணம் 2026ஐ முன்னின்று நடத்தும் வரவேற்பு நாடுகளின் தலைவர்கள் என்ற வகையில் பகிரங்க குலுக்கலின்போது வருகைத்தந்திருந்தனர்.

பகிரங்க குலுக்கலின் பிரகாரம் பிறேஸில் - மொரோக்கோ, நெதர்லாந்து - ஜப்பான் ஆகிய போட்டிகளும் 2002 உலகக் கிண்ண ஆரம்பப் போட்டியில் பிரான்ஸை அதிர்ச்சியில் ஆழ்த்திய செனகல் ஆகிய அணிகளுக்கு இடையிலான மீள் போட்டியும் பீபா உலகக் கிண்ணம் 2026இல் அமையவுள்ள முக்கிய போட்டிகளில் சிலவாகும்.

2010 உலகக் கிண்ண ஆரம்பப் போட்டியில் மோதிய மெக்சிக்கோ - தென் ஆபிரிக்கா ஆகிய அதே அணிகள் மெக்சிகோ சிட்டி விளையாட்டரங்கில் ஜூன் 11ஆம் திகதி நடைபெறவுள்ள பிபா உலகக் கிண்ணம் 2026 ஆரம்பப் போட்டியிலும் மோதவுள்ளன.

இதேவேளை, ஸ்பெய்ன், ஜேர்மனி, ஆர்ஜன்டீனா, போர்த்துக்கல் ஆகிய பலம்வாய்ந்த அணிகளை முதல் தடவையாக உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட தகுதிபெற்றுள்ள முறையே கபோ வேர்டே, கியூரக்காஓ. ஜோர்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய அணிகள் எதிர்த்தாடவுள்ளன.

பீபா உலகக் கிண்ணம் 2026 - அணிகள் பங்குபற்றும் குழுக்கள் விபரம் இதோ.

குழு A: மெக்சிகோ, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, UEFA பிளே-ஆஃப் D வெற்றியாளர்.
குழு B: கனடா, UEFA பிளே-ஆஃப் A வெற்றியாளர், கத்தார், சுவிட்சர்லாந்து.
குழு C: பிரேசில், மொராக்கோ, ஹைட்டி, ஸ்காட்லாந்து.
குழு D: அமெரிக்கா, பராகுவே, ஆஸ்திரேலியா, UEFA பிளே-ஆஃப் C வெற்றியாளர்.
குழு E: ஜெர்மனி, குராக்கோ, ஐவரி கோஸ்ட், ஈக்வடார்.
குழு F: நெதர்லாந்து, ஜப்பான், UEFA பிளே-ஆஃப் B வெற்றியாளர், துனிசியா.
குழு G: பெல்ஜியம், எகிப்து, ஈரான், நியூசிலாந்து.
குழு H: ஸ்பெயின், கேப் வெர்டே, சவூதி அரேபியா, உருகுவே.
குழு I: பிரான்ஸ், செனகல், FIFA பிளே-ஆஃப் 2 வெற்றியாளர், நார்வே.
குழு J: அர்ஜென்டினா, அல்ஜீரியா, ஆஸ்திரியா, ஜோர்டான்.
குழு K: போர்ச்சுகல், FIFA பிளே-ஆஃப் 1 வெற்றியாளர், உஸ்பெகிஸ்தான், கொலம்பியா.
குழு L: இங்கிலாந்து, குரோஷியா, கானா, பனாமா.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.