இலங்கை U-19 ஆசிய கோப்பை அணியில் யாழ்ப்பாண வீரர்கள் தெரிவாகியுள்ளனர்.
[2025-12-10 14:39:16] Views:[16]
நடைபெறவிருக்கும் ACC ஆண்கள் U-19 ஆசிய கோப்பையில் (50 ஓவர்) பங்கேற்க 15 பேர் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு அறிவித்துள்ளது. அந்த அறிக்கையின்படி, இலங்கை அணி இன்ற தினம் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குப் புறப்படும்.
இந்தப் பட்டியலில் யாழ்ப்பாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இரண்டு வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரியைச் சேர்ந்த குகதாஸ் மாதுளனும், யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் ஆகாஷ் ஆகியோர் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.










