yarlathirady.com

இலங்கைக்கு கடத்தவிருந்த 150 கிலோ கஞ்சா இந்தியாவில் பறிமுதல்...!

[2025-12-15 19:29:40] Views:[26]

இந்தியா ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அடுத்த முள்ளிமுனை மீன்பிடி துறைமுகத்திலிருந்து நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 25 லட்சம் ரூபா மதிப்பிலான 150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இருவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முள்ளிமுனை கடற்கரையிலிருந்து நாட்டுப்படகில் இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாக தேவிப்பட்டினம் மரைன் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று இரவு கடற்கரை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மரைன் பொலிசாரை கண்டதும் அங்கிருந்து இருவர் தப்பி சென்ற நிலையில் அந்த பகுதியை சுற்றி வளைத்து பொலிசார் தீவிரமாக தேடினர். அப்போது இலங்கைக்கு கடத்துவதற்காக 150 கிலோ கஞ்சா சாக்கு மூட்டையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் முற்படுத்த சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


சினிமாசெய்திகள்
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
வெளியானது சர்தார்-2 திரைப்படத்தின் அப்டேட்
2026-05-26 11:33:17
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் கார்த்தி, தனது இயல்பான நடிப்பு மற்றும் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களால் ரசிகர்களின் மனதில் தனித்த இடத்தைப் பிடித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய்யின் கடைசி படத்தின் வெளீயீடு தொடர்பான செய்தி..!!
2026-05-25 21:42:18
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படமாக கருதப்படும் இப்படம், பல காரணங்களால் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.