yarlathirady.com

திருகோணமலை பேருந்து விபத்து.! 14 பயணிகள் படுகாயம்!!

[2025-12-25 17:50:20] Views:[27]

திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹிந்தபுர சந்தியில் இன்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 14 பயணிகள் காயமடைந்தனர்.

அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

மஹிந்தபுர சந்திக்கு அருகில் பயணித்துக்கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, பேருந்து வீதியை விட்டு விலகி தலைகீழாகக் கவிழ்ந்துள்ளது.

விபத்து இடம்பெற்றபோது பேருந்தில் 21 பயணிகள் பயணித்துள்ளனர்.

அவர்களில் காயமடைந்த 14 பேர் உடனடியாக மீட்கப்பட்டு சேருநுவர மற்றும் மூதூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாகத் தகவல் அறிந்த சேருநுவர பொலிஸார் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.