yarlathirady.com

யாழ் புனித மரியன்னை பேராலயத்தில் பிரதான நத்தார் திருப்பலி:

[2025-12-25 18:16:35] Views:[54]

யாழ். மறைமாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி, யாழ்ப்பாணம் புனித மரியன்னை பேராலயத்தில் மிகவும் பக்திப்பூர்வமாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. யாழ். மறைமாவட்ட ஆயர் தலைமையில் நடைபெற்ற இந்த விசேட ஆராதனையில் பெருந்திரளான கத்தோலிக்க மக்கள் கலந்துகொண்டனர்.

நாட்டில் நிலவிய அனர்த்தங்கள் மற்றும் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரில் பங்கெடுக்கும் வகையில், இம்முறை ஆடம்பரக் கொண்டாட்டங்களைத் தவிர்த்து “எளிமையான நத்தார்” கொண்டாடுமாறு திருச்சபைகள் விடுத்த வேண்டுகோளை மக்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டனர். இதனால் வழமையான வாணவேடிக்கைகள், மின் அலங்காரங்கள் இன்றி மிக எளிமையான முறையில் வழிபாடுகள் நடைபெற்றன.

புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்ற இந்த நள்ளிரவு வழிபாட்டில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் ஆகியோர் பொதுமக்களுடன் இணைந்து வழிபாடுகளில் ஈடுபட்டதோடு, நத்தார் வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்டனர்.

ஆராதனையின் போது, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக விசேட பிரார்த்தனைகள் ஏறெடுக்கப்பட்டன. கொண்டாட்டங்களுக்காக செலவிடும் தொகையை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளாக வழங்குமாறும் இதன்போது கேட்டுக்கொள்ளப்பட்டது.

யாழ். குடாநாட்டின் ஏனைய கத்தோலிக்க தேவாலயங்களிலும் நள்ளிரவு மற்றும் காலை நேர ஆராதனைகள் மிக எளிமையான முறையில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.