yarlathirady.com

வடகிழக்கில் நாளை முதல் கனமழை: மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!

[2026-01-04 11:49:16] Views:[28]

வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களுக்கு நாளை முதல் 12.01.2026 வரை கனமானது முதல் மிகக் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை பேராசிரியர் மற்றும் தலைவர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

கடந்த 28.12.2025 அன்று வங்காள விரிகுடாவில் இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் தோன்றிய காற்றுச் சுழற்சி தற்போது தாழ்வு நிலையாக வலுப்பெற்றுள்ளது.

இது மேலும் மேற்கு, வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து, இலங்கைக் தெற்காக நகர்ந்து குமரிக்கடலைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காற்றுச் சுழற்சி காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களுக்கு நாளை முதல் 12.01.2026 வரை கனமானது முதல் மிகக் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

மிக முக்கியமாக எதிர்வரும் 06.01.2026 முதல் 11.01.2016 வரை வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கு மிக மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

அதேவேளை இலங்கையின் வடக்கு, கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தெற்கு கடற்பிராந்தியங்கள் எதிர்வரும் 06.01.2026 முதல் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதில் மிக அவதானமாக செயட்பட வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.