yarlathirady.com

இஞ்சியின் உடல்நலப் பயன்கள் குறித்து சுகாதார நிபுணர்களின் கருத்து.

[2026-01-20 22:39:42] Views:[47]

கர்ப்பகால பயணத்தின் போது ஏற்படும் வாந்தி, மனஅழுத்தம், வயிற்றுப் புழு தொற்றுகள் போன்ற பல காரணங்களால் குமட்டல் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் இஞ்சி உண்மையிலேயே குமட்டலைக் குறைக்க உதவுமா என்ற கேள்வி பலரிடமும் எழுகிறது.

இதற்கு உணவு மற்றும் சுகாதார நிபுணர்கள் நேர்மறையான பதிலை வழங்குகின்றனர்.

பல ஆய்வுகள், இஞ்சி குமட்டல் அறிகுறிகளை குறைக்க உதவுவதாக உறுதிப்படுத்தியுள்ளன.

பிரிட்டன் தேசிய சுகாதார சேவையும் (NHS) குமட்டல் ஏற்பட்டால் இஞ்சி தேநீர் குடிக்க பரிந்துரைக்கிறது.

உணவியல் நிபுணரும் பிரிட்டிஷ் டயட்டெடிக் அசோசியேஷனின் செய்தித் தொடர்பாளருமான ஆன்னா டேனியல்ஸ்,

“இஞ்சியில் உள்ள சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகள் செரிமான மண்டலத்தில் ஏற்படும் அழற்சியை குறைத்து, வயிற்று உபாதைகளைத் தணிக்க உதவுகின்றன”என விளக்குகின்றார்.

குமட்டலை குறைப்பதுடன் மட்டுமல்லாமல், இஞ்சி பல்வேறு உடல்நலப் பயன்களையும் வழங்குகிறது அந்த வரிசையில் அழற்சி குறைப்பு,நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துதல், தசை வலி மற்றும் உடல் வலிகளைத் தணித்தல், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்,ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு அளவைக் குறைக்க உதவுதல் என்பனவாகும்.

கொலராடோ பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில், இஞ்சி உடலில் அதிகரிக்கும் அழற்சி செல்களை கட்டுப்படுத்த உதவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, முடக்கு வாதம், லூபஸ் போன்ற தன்னுடல் தாக்க நோய்களில் இது பயனுள்ளதாக இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

பேராசிரியர் கிறிஸ்டன் டெமோருயல் கூறுகையில்,

“பல ஆய்வுகள் இஞ்சி சத்து மாத்திரைகளை அடிப்படையாகக் கொண்டவை. அதே அளவிலான பலனை இஞ்சி தேநீர் அல்லது உணவின் மூலம் பெற முடியுமா என்பதை அறிய மேலும் ஆய்வுகள் தேவை”என தெரிவித்துள்ளார்.

இஞ்சியை உணவில் சேர்ப்பது எப்படி என சமையல் நிபுணர்கள் கூறும் சில எளிய வழிகள் இஞ்சி தேநீர் (இஞ்சி + எலுமிச்சை + தேன்),சாலட் டிரஸ்ஸிங் (துருவிய இஞ்சி + ஆலிவ் எண்ணெய்), காய்கறி, மீன், கோழி உணவுகளில் துருவிய இஞ்சி,மஞ்சள், கருப்பு மிளகுடன் சேர்த்த சூடான பானம்

இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கி அல்லது துருவி பயன்படுத்துவது அதன் சத்துகள் உடலில் சிறப்பாக உறிஞ்ச உதவும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இத்தாலி கட்டானியா பல்கலைக்கழக பேராசிரியர் பயாஜியோ ஃபாலிகோ கூறுகையில்,

“இஞ்சி ஒரு உதவிப் பொருளே தவிர, அனைத்து நோய்களுக்கும் முழுமையான மருந்தாக கருதக் கூடாது. ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாற்றாக இதை பயன்படுத்த முடியாது”என எச்சரிக்கிறார்.

இஞ்சி குமட்டல், அழற்சி மற்றும் தசை வலியை குறைக்க உதவும் ஒரு இயற்கை உணவுப் பொருளாக இருப்பது அறிவியல் ரீதியாக உறுதியாகியுள்ளது. ஆனால், அதை சமச்சீர் உணவுமுறை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக மட்டுமே பயன்படுத்துவது சிறந்தது.


சினிமாசெய்திகள்
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
வெளியானது சர்தார்-2 திரைப்படத்தின் அப்டேட்
2026-05-26 11:33:17
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் கார்த்தி, தனது இயல்பான நடிப்பு மற்றும் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களால் ரசிகர்களின் மனதில் தனித்த இடத்தைப் பிடித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய்யின் கடைசி படத்தின் வெளீயீடு தொடர்பான செய்தி..!!
2026-05-25 21:42:18
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படமாக கருதப்படும் இப்படம், பல காரணங்களால் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.