அஜித்தின் அடுத்த படம் தொடர்பான சுவாரசியமான தகவல்.
[2026-01-23 21:47:25] Views:[16]
அஜித்தின் தீவிர ரசிகரும், அஜித்தின் 64வது படத்தை இயக்க உள்ள இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன், மங்காத்தா ரீ-ரிலீஸை திரையரங்கில் நேரில் சென்று பார்த்துள்ளார். படம் பார்த்துவிட்டு வெளியே வந்த ஆதிக் ரவிச்சந்திரனிடம், அஜித் 64 குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் தற்போது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.
அஜித் 64 குறித்து அப்டேட் கேட்டபோது ஆதிக் ரவிச்சந்திரன், "இந்த படத்தில் பல விஷயங்கள் ரசிகர்களுக்கு சர்ப்றைஸாக இருக்கும். பேமிலி ஆடியன்ஸ்க்கு பிடிக்கும் வகையில் படத்தை எடுக்க உள்ளோம். படத்தின் இசையமைப்பாளர் தொடங்கி, நடிகர்கள் வரை அனைத்தும் ரசிகர்களுக்கு சர்ப்றைஸாக இருக்கும்.” என்று கூறியுள்ளார்.
அவரது இந்த பேச்சு, அஜித் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, இசையமைப்பாளர் மற்றும் நடிகர்கள் தேர்வு குறித்த அவரது குறிப்புகள், சமூக வலைத்தளங்களில் பல கேள்விகளை எழுப்பியுள்ளன.










