yarlathirady.com

ஜனநாயகன் திரைப்படத்திற்கு மேலும் சிக்கல்..!!

[2026-01-27 20:47:01] Views:[22]

விஜய் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள ஹெச். வினோத் இயக்கத்தில், நடிகர் இளைய தளபதி விஜய்யின் நடிப்பில் உருவான திரைப்படம் 'ஜன நாயகன்'.

இந்த திரைப்படம் இம்மாதம் கடந்த 9 ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாமையினால் இந்த திரைப்படம் வெளியாவதில் சிக்கல்கள் எழுந்தன.

திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவது தொடர்பாகத் தணிக்கை சபை தாக்கல் செய்த மேன்முறையீட்டு வழக்கை, சென்னை மேல் நீதிமன்றம் திகதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது.

இந்தநிலையில் குறித்த திரைப்படத்திற்கான இறுதி தீர்ப்பு இன்று(27) அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 'ஜன நாயகன்' திரைப்படத்திற்கு தணிக்கை சான்று உடனே வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி தீர்ப்பை சென்னை மேல் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. எனவே இத்திரைப்படம் வெளியாவதில் மேலும் சிக்கல் நிலையே தொடருகிறது.....


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.