yarlathirady.com

விஜய்க்கு ரூ.1.5 கோடியை அபராதமாக விதித்த உயர் நீதிமன்றம்.!

[2026-02-08 12:31:25] Views:[32]

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான ‘புலி’ திரைப்படத்திற்காக அவர் பெற்றதாக கூறப்படும் ரூபாய் 15 கோடி சம்பளத்தை வருமான வரி கணக்கில் முறையாக காட்டவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் விதிக்கப்பட்டது.

குறித்த அபராதத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம், நடிகர் விஜய் ரூபாய் 1.5 கோடியை அபராதமாக செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புலி’ திரைப்படத்திற்காக நடிகர் விஜய் ரூபாய் 15 கோடி சம்பளம் பெற்றதாக வருமான வரித்துறை தரப்பில் கூறப்பட்டது. ஆனால், அந்த தொகையை அவர் தனது வருமான வரி கணக்கில் முழுமையாக காட்டவில்லை என வருமான வரித்துறை குற்றம்சாட்டியது.

இதையடுத்து, வருமான வரி சட்ட விதிகளின் அடிப்படையில், அந்த தொகையின் 10 சதவீதம், அதாவது ரூபாய் 1.5 கோடி அபராதமாக விதிக்க உத்தரவிடப்பட்டது.

இந்த அபராதத்தை எதிர்த்து, நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதில், வருமான வரித்துறை விதித்த அபராதம் சட்டபூர்வமற்றது என்றும், அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இரு தரப்பின் வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்றம், நடிகர் விஜய் ரூபாய் 1.5 கோடியை அபராதமாக செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.