yarlathirady.com

ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா...?

[2026-02-10 22:22:10] Views:[19]

நடிகர் விஜய்யின் இறுதிப் படமான 'ஜனநாயகன்' திரைப்படம் ஜனவரி 09ஆம் திகதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருந்தது. ஆனால் இந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாமல் மறு ஆய்வுக்கு பரிந்துரைக்கப்பட்ட காரணத்தினால் படத்தின் வெளியீட்டு திகதி தள்ளிப் போனது.

இதையடுத்து படத் தயாரிப்பு நிறுவனமான KVN புரொடக்ஷன் சென்சார் சான்றிதழ் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனாலும் நீதிமன்றத்தின் தீர்ப்பும் சாதகமாக கிடைக்காததால் ஜனநாயகன் பட வெளியீடு மேலும் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்பு சென்சார் போர்டு பரிந்துரைத்த மாற்றங்களை செய்யப்படக் குழு ஒப்பு கொண்டதாகவும், படத்தில் சர்ச்சைக்குரிய சில காட்சிகள் நீக்கப்பட்டு படத்தின் நீளம் 20 நிமிடங்கள் வரை குறையும் என்றும் கூறப்பட்டது. ஆனாலும் படக்குழுவுடன் தொடர்புடையவர்கள் இந்த தகவலை மறுத்துள்ளனர்.

அதன்படி அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால் எதிர்வரும் 20ஆம் தேதி ஜனநாயகன் திரைப்படம் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல் ஜனநாயகன் படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.