yarlathirady.com

2029 ஆம் ஆண்டளவில் நாட்டில் ஒவ்வொரு நபருக்கும் அதிவேக இன்டர்நெட் வசதி...

[2026-02-14 00:00:49] Views:[15]

2029 ஆம் ஆண்டளவில் நாட்டின் ஒவ்வொரு நபருக்கும் அதிவேக இணைய (High-Speed Broadband) வசதியை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) ஜனக சேனாரத்ன தலைமையில் 2026.02.06 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோது, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு என்பவற்றுக்கான 2026 வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடு தொடர்பான செயற்திட்டம் குறித்துக் கலந்துரையாடிய போதே அதிகாரிகள் இதனைக் குறிப்பிட்டனர்.

அத்துடன், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சிற்கான 2026 வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடு தொடர்பான செயற்திட்டம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், ஒரு சில நிறுவனங்களின் வருடாந்த அறிக்கைகள் மற்றும் செயற்திறன் அறிக்கைகளுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திம ஹெட்டிஆராச்சி, லசித் பாஷன கமகே, சதுர கலப்பத்தி, அபூபக்கர் ஆதம்பாவா மற்றும் ருவன் விஜேவீர ஆகியோர் கலந்துகொண்டனர்.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.