யாழில் வீடொன்றிலிருந்து சடலமொன்று மீட்பு..!!
[2026-03-22 19:41:06] Views:[113]
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு பகுதியில் நேற்றைய தினம் வீடொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் வீடொன்றில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து அப் பகுதி மக்கள் குறித்த வீட்டில் வசித்து வந்த நபர் சில நாட்கள் வெளியே நடமாடாத காரணத்தால் உறவினருக்கு அறிவித்துள்ளனர்
உடனடியாக உரிய இடத்திற்கு சென்ற உறவினர்கள் வீட்டினை திறந்து பார்த்த போது வீட்டில் வசித்த ஆண் சடலமாக காணப்பட்ட நிலையில் மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.










