yarlathirady.com

சென்னையில் ஐபிஎல் போட்டிகள்: தள்ளி வைக்க கோரி வழக்கு..!!

[2026-04-02 15:22:38] Views:[92]

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருந்தாலும் வழக்கம் போல ஐபிஎல் போட்டிகள் இந்த ஆண்டும் நடத்தப்பட உள்ளது. சென்னை - பஞ்சாப் அணிகள் மோதும் முதல் போட்டி சென்னை மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது.


இந்த நிலையில், சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதை தள்ளிவைக்க கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. சட்டத்தில் எந்த தடையும் இல்லாத நிலையில் ஐபிஎல் போட்டிகளை எப்படி நிறுத்த முடியும்? ஐபிஎல் போட்டிகளை நடத்துவதால் மனுதாரருக்கு என்ன பிரச்சினை? என ஐகோர்ட் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் அவசரமாக விசாரிக்க முடியாது என்றும் வழக்கு எண்ணிடப்பட்டால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.