வடக்கு மாகாணத்திற்கான புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பம்..!!
[2026-04-04 16:19:59] Views:[93]
வடக்குக்கான புகையிரத சேவைகள் எதிர்வரும் 09ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
மஹவ முதல் ஓமந்தை வரையிலான புகையிரத பாதையில் ஐந்து புகையிரத பாலங்களை மாற்றியமைக்கவும், யானைகள் கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையை புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ளவும் ஏதுவாக வடக்குக்கான புகையிரத சேவைகள் கடந்த ஜனவரி மாதம் 26ஆம் திகதி முதல் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் தமிழ் - சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு, எதிர்வரும் 09ஆம் திகதி முதல் புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
சுமார் இரண்டரை மாதங்களுக்கு பின்னர் புகையிரத சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளமையால் புகையிரத கடவைகளை கடப்பவர்கள் பாதுகாப்பாக கடக்குமாறும், புகையிரத பாதைகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.










