யாழில் வாள்களுடன் இளைஞன் ஒருவர் கைது..!
[2026-04-07 12:51:32] Views:[105]
ஆபத்தான வாள்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியைச் சேர்ந்த 28வயதான இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே வாள்வெட்டுக் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய சந்தேக நபரே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் கைதான இளைஞனை இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் முற்படுத்தவிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.










