கொழும்பு - யாழ்ப்பாணம் தொடருந்து சேவைகள் மீண்டும் ஆரம்பம்: வெளியானது பயண நேர அட்டவணை
[2026-04-07 12:55:31] Views:[70]
"டித்வா" புயலால் சேதமடைந்த வடக்கு தொடருந்து பாதையை சீரமைக்கப்பட்டுள்ளதால் யாழ்ப்பாணம் - காங்கேசந்துறைக்கு தொடருந்து சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது .
குறித்த சேவையானது, எதிர்வரும் 9ஆம் திகதி வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், சீரமைப்புப் பணிகள் இந்திய அரசாங்கத்திடமிருந்து 5 மில்லியன் டொலர் மானியத்துடன் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.










