yarlathirady.com

யாழில் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி வீடொன்று சேதம்..!!

[2026-04-07 12:58:41] Views:[108]

யாழ்ப்பாணத்தில் மின்னல் தாக்கத்தினால் வீடொன்று சிறு சேதங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில், வீட்டில் இருந்தோர் தெய்வாதீனமாக காயங்கள் இன்றி தப்பியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் நேற்று அதிகாலை வேளை பல இடங்களில் இடி மின்னல் உடன் கூடிய மழை பெய்தது. இதன்போது, வடமராட்சி, கெருடாவில் பகுதியில் உள்ள வீடொன்றின் அருகில் நின்ற தென்னை மரத்தின் மீது மின்னல் தாக்கியதில் தென்னை மரம் தீப்பற்றி கொண்டதுடன் , குறித்த மின்னல் தாக்கத்தால் வீட்டின் சுவர்களில் ஓட்டைகள் விழுந்துள்ளதுடன் , ஜன்னல் மற்றும் கதவு நிலைகளும் சேதமடைந்துள்ளன.

இருந்த போதிலும் வீட்டில் இருந்தோர் காயங்கள் எதுவும் இன்றி தப்பித்துக்கொண்டனர்.

தென்னை மரம் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி எரிவதனை கண்ட அயலவர்கள் விரைந்து செயற்பட்டு தீயினை அணைத்துள்ளனர்

அதேவேளை குறித்த மின்னல் தாக்கத்தினால் அயலவர்களின் தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட இலத்திரனியல் பொருட்கள் சிலவும் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.