yarlathirady.com

தாலிக்கொடியை களவாடிய பெண் கைது: யாழில் அதிர்ச்சி சம்பவம்..!

[2026-04-08 16:02:22] Views:[98]

யாழ்ப்பாணம், மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவில் களவாடிய தாலிக்கொடியை கிளிநொச்சியில் உள்ள ஆலயம் ஒன்றின் பிள்ளையார் சிலைக்கு பின்புறமாக இருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.

பன்றித்தலைச்சி அம்மன் கோவிலில் கடந்த 30ஆம் திகதி நடைபெற்ற பங்குனி திங்கள் உற்சவத்தின் போது பக்தர்கள் கூட்ட நெரிசலில் பெண்ணொருவரின் தாலிக்கொடி களவாடப்பட்டிருந்தது.

அது தொடர்பில் குறித்த பெண் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து, ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை சோதனை செய்து தாலிக்கொடி அறுத்த 58 வயதான பெண்ணை பொலிஸார் அடையாளம் கண்டு, அவர் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த பெண் கபாந்த திங்கட்கிழமை மீண்டும் ஆலயத்திற்கு காரில் வருகை தந்த நிலையில் அவரை பொலிஸார் அடையாளம் கண்டு கைது செய்தனர். விசாரணைகளை முன்னெடுத்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில், பன்றித்தலைச்சி அம்மன் கோவிலில் களவாடிய தாலிக்கொடியை தான் கிளிநொச்சி பகுதியில் உள்ள தாம் வழிபாட்டிற்கு செல்லும் ஆலயம் ஒன்றின் பிள்ளையார் சிலைக்கு பின்புறமாக மறைத்து வைத்திருப்பதாக வாக்குமூலம் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் தாலிக்கொடியை மீட்டு வந்துள்ளனர்.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.