yarlathirady.com

யாழில் இரண்டு இளைஞர்கள் செய்த மோசமான செயல்..!!

[2026-04-10 21:36:39] Views:[107]

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை பழிவாங்குவதற்காக, குறித்த இளைஞனின் தம்பியான 17 வயதான சிறுவனை கடத்தி சென்று சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றுமொருவர் தலைமறைவாகியுள்ளார்.

மருதனார்மடம் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக குறித்த இளைஞனின் 17 வயதான தம்பியை இருவர் கடத்தி சென்று, இரகசிய இடமொன்றில் அடைத்து வைத்து, சிறுவனை அடித்து சித்தரவதை புரிந்து, அதனை வீடியோவாக எடுத்து, அந்த வீடியோவை சிறுவனின் அண்ணன் உள்ளிட்ட சிலருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை கைது செய்துள்ள நிலையில், மற்றையவர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறதது.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.