yarlathirady.com

இன்று நாட்டில் வெப்பமும் மழையும்

[2026-04-11 10:50:57] Views:[141]

இன்று நாட்டின் பல பகுதிகளில் அதிக வெப்பநிலை மற்றும் இடியுடன் கூடிய மழை ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளதன்படி, சூரியன் வடக்கு நோக்கி நகரும் நிலையினால், இன்று மதியம் சுமார் 12.11 மணியளவில் பொம்பரிப்பு, அனுராதபுரம், மிகிந்தலை, ஹலன்பிந்துனுவெவ, அக்போபுர மற்றும் சேருநுவர பகுதிகளில் சூரியன் நேரடியாக உச்சத்தில் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


நுவரெலியா, கண்டி, மாத்தளை, வதுளை, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களைத் தவிர்ந்த நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறவேளை, சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களில், மேலும் கண்டி, நுவரெலியா, அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் நாட்டின் ஏனைய பகுதிகளில் வறட்சியான வானிலை நிலவும் என்றும் கூறப்பட்டுள்ளது.


இடியுடன் கூடிய மழை நேரங்களில் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளில் மழை பெய்யக்கூடும் எனவும் கடலில் மணிக்கு 20 முதல் 30 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் நிலையில், மன்னார் முதல் புத்தளம் வழியாக கொழும்பு மற்றும் பொத்துவில் முதல் மட்டக்களப்பு, திருகோணமலை வரையிலான கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40 கிலோமீட்டரை மீறக்கூடும் எனவும் இதனால் கடல் பகுதிகள் சில நேரங்களில் கொந்தளிப்பாக காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.