yarlathirady.com

ஹந்தானை மலைப்பகுதியை படம் பிடிக்க சென்று மாயமானவர் - இராணுவத்தினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

[2026-04-16 10:58:55] Views:[90]

கண்டி - ஹந்தானை மலைப்பகுதிக்குச் சென்று காணாமல்போன ஒருவரை இராணுவத்தினர் பாதுகாப்பாக மீட்டுள்ளதாக தெறிய வருகிறது.


இவர், மலை ஏறி அரிய காட்சிகளைப் படம் பிடிப்பதில் ஆர்வம் கொண்டவர் என தெரிவிக்கப்படுகிறது குறித்த நபர் ஹந்தானையின் மிக உயர்ந்த பகுதியான ஓணான் முதுகு அல்லது கட்டுஸ்ஸ கொண்ட என்றழைக்கப்படும் பகுதியில் சிக்கியிருப்பதாக கண்டி பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டிருந்தது.


அந்த மலை உச்சியில் நிலவும் கடும் ஆபத்தான சூழல் காரணமாக அவரை மீட்பது மிகவும் கடினமான காரியமாக இருந்துள்ளது. இதனையடுத்து, கண்டி பொலிஸார் அந்த மலைப் பிரதேசம் அமைந்துள்ள கலஹா மற்றும் பேராதனை பொலிஸ் நிலையங்களுடன் இணைந்து மீட்பு நடவடிக்கையை ஆரம்பித்தனர்.


இந்த மீட்புப் பணியின்போது இராணுவத்தின் சிங்க ரெஜிமண்ட் படையணியின் வீரர்கள் இணைந்து குறித்த நபரை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர் பின்னர், கண்டி பொலிஸாரிடமிருந்து கிடைத்த தகவலுக்கு அமைய, இரண்டு இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் எட்டுப் பேர் கொண்ட ஒரு அணியினர் (பட்டேலியன்) இந்த சவாலான மீட்புப் பணியைத் தொடங்கி வெற்றி பெற்றனர் கடும் இருள் மற்றும் பனிமூட்டமான வானிலைக்கு மத்தியிலும் இரவு முழுவதும் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு எவ்வித காயங்களுமின்றி பாதுகாப்பாக அவரை காலை வேளையில் மீட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.