குறிகட்டுவான் இறங்கு துறையின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்.
[2026-04-20 12:21:37] Views:[49]
குறிகட்டுவான் இறங்கு துறையின் இரண்டாம் கட்ட புனரமைப்பு பணிகளுக்கான ஆரம்ப நிகழ்வு நாளை மறுதினம் புதன்கிழமை காலை 09மணிக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
இவ் புனரமைப்பிற்காக சுமார் 984.73 மில்லியன் ரூபா பணத்தை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இவ் இறங்குதுறை புதிய தோற்றத்துடன் பல தசாப்தங்களின் பின் மீள நிர்மானிக்கப்பட உள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 05ஆம் திகதி இறங்குதுறைக்கான முதலாம் கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, துரித கெதியில் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இரண்டாம் கட்ட பணிகள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.










