அரச பாடசாலைகளில் இன்று கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்
[2026-04-20 12:25:30] Views:[42]
2026ம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகின்றன. புத்தாண்டு விடுமுறையின் பின்னர் பாடசாலைகள் இன்று திறக்கப்படுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
புத்தாண்டு விடுமுறை கடந்த 11ம் திகதி முதல் நேற்றைய தினம் வரை வழங்கப்பட்டிருந்தது. இன்று ஆரம்பமாகும் புதிய தவணை ஜூலை மாதம் 24ம் திகதி வரை நடைமுறையிலிருக்கும்
இதேவேளை முஸ்லிம் பாடசாலைகளில் முதலாம் தவணையின் நான்காம் கட்டம் இன்று முதல் ஆரம்பாகிறது.










